தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 01:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை அதிகரிக்க, சிடிக்கள் மூலமாக ஹலோ இங்கிலீஸ் உட்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக, பள்ளிகளுக்கு லேப்- டாப் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் குறித்து சிடி மூலமாக கம்ப்யூட்டரில் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: தற்போதுள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் விதம், பெயிண்டிங், எம்.எஸ்., வேர்டு போன்ற அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறோம்.
 
ஆசிரியர்கள் அனைவருமே ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளதால், மாணவர்களுக்கு கற்பிப்பதில் எவ்வித சிரமமும் இல்லை. மாணவர்களுக்கு வேறு பாடம் எடுக்கும்போது, நேரம் ஒதுக்கி கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். எனவே, மேல்நிலைப்பள்ளிகளை போன்று இங்கும் தனியாக கம்ப்யூட்டர் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு குறிப்பிட்ட வகுப்புகள் ஒதுக்கி பயிற்சி அளித்தால் அவர்களின் திறன் மேலும் மேம்படக்கூடிய வாய்ப்புள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளியும் ஜொலிக்க முடியும். இவ்வாறு, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us