தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலையில் மரபணு படிப்புகளை மேம்படுத்த வேண்டும்

மதுரை காமராஜ் பல்கலையில் மரபணு படிப்புகளை மேம்படுத்த வேண்டும்

மதுரை காமராஜ் பல்கலையில் மரபணு படிப்புகளை மேம்படுத்த வேண்டும்


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இப்பல்கலையில் வேறெந்த பல்கலையிலும் இல்லாத வகையில், மரபணுமாற்ற தொழில்நுட்பவியல் மற்றும் மரபணு தொகுப்பியல் (எம்.எஸ்சி.,யில் ஜெனோமிக்ஸ், மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜி) போன்ற ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.

அவை வருமாறு:எம்.எஸ்சி., ஜெனோமிக்ஸ்: மரபணு தொகுப்புவியல் துறையான இப்படிப்பில் சேர, இளங்கலை அறிவியலில் (பி.எஸ்சி.,) ஏதாவது ஒரு பிரிவு, அல்லது பயோடெக்னாலஜி, பி.டெக்., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்திருக்கலாம். இத்துறை முழுக்க, மனிதனின் மரபணு தொடர்பான ஆராய்ச்சி படிப்பு பற்றியது.

இரண்டாண்டு படிப்பான இத்துறையில் சேர, இந்திய அளவில் மதுரை, சென்னை, மும்பை, டில்லி என 8 மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் பங்கேற்போர் 1: 5 என்ற அளவில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அவர்களில் 16 பேர் தேர்வு செய்யப் படுவர். 40 சதவீத "சீட்&'கள் வெளி மாநிலத்த வருக்கும், மீதியுள்ள 60 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும் வழங்கப்படும். ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் குணசேகரன் கூறியதாவது: இப்படிப்பு மதுரை காமராஜ் பல்கலையில் தவிர, வேறெந்த பல்கலையிலும் இருப்பதாக தெரியவில்லை. பஞ்சாப் பல்கலையில் இதேபோன்ற ஹியூமன் ஜெனோமிக்ஸ் என்ற படிப்பு உள்ளது. ஜெனோமிக்ஸ் படித்து முடித்தவர்களில் பெரும்பாலோர், உயர்கல்வியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வெளிநாடு சென்று விடுகின்றனர். அங்கு மருத்துவத்துறையில் நல்ல வாய்ப்புகளும், எதிர்காலமும் உள்ளது, என்றார்.

எம்.எஸ்சி., மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜி: சுயநிதியாக செயல் படும் மரபணு மாற்ற தொழில்நுட்ப படிப்பில் சேர, பி.எஸ்சி., படித்திருக்க வேண்டும். இந்திய அளவில் 8 மையங்களில் நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் நேர்முகத் தேர்வில் நூறு பேரை தேர்வு செய்து, அதில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மருத்துவம், விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தேவையான மரபணுக்களை, தாவரம், விலங்குகள், மனிதர்களிடம் இருந்து பெற்று, நுண்ணுயிர்களில் வைப்பது தொடர்பான படிப்பு இது.

உதாரணமாக, மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ பிரச்னைக்கு எந்த மரபணு காரணம் என அறிந்து, அதை மட்டும் சரிசெய்யும் வகையில் நுண்ணுயிர்களை மாற்றி அமைப்பது தொடர்பானது. இதுவும் முழுக்க முழுக்க, ஆய்வு தொடர்பான படிப்பே. மதுரை காமராஜ் பல்கலை தவிர வேறெங்கும் இப்படிப்பு கிடையாது. வெளிநாட்டு பல்கலைகளில் இப்படிப்புக்கென மாதம் 60 ஆயிரம் டாலர் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மதுரை காமராஜ் பல்கலையில் 1997 முதல் இன்று வரை 140 மாணவர்கள் படித்துள்ளனர். இவர்களில் 120 பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்று ஆய்வு படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

சுயநிதி படிப்பு என்பதால் ஆய்வகம், கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். விடுதி மற்றும் கட்டணங்கள் தனி. இதே படிப்பை அமெரிக்காவில் படிக்க ஆண்டுக்கு 12 லட்சம், ஐரோப்பாவில் 9 லட்சம், ஆஸ்திரேலியாவில் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இப்படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைகளில் ஆய்வு மேற்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க (கட்டணம் ரூ. 600) பிப்.8 கடைசிநாள். நுழைவுத் தேர்வு மார்ச் 6ல் நடக்க உள்ளது.இப்படிப்புகளுக்கு தேவையான ஆய்வுக் கூடம், நூலகம் உட்பட அனைத்து வசதிகளும் பல்கலையில் உள்ளன. இந்த ஆய்வுப் படிப்புக்கும் பல்கலை மானியக்குழு நிதி உட்பட தேவையான வசதிகளை செய்தால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மரபணு ஆய்வில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us