UPDATED : ஜன 10, 2010 12:00 AM
ADDED : ஜன 10, 2010 10:26 AM
இதில், ஐ.பி.எஸ்., சுக்கான இடங்கள் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளன.குடிமைப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வு களை யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.கடந்த ஆண்டில் இவை அனைத்தும் சேர்த்து 580 இடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கான தேர்வு இடங் களை அதிகரித்து யு.பி.எஸ்.சி., சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கூடுதலாக 385 சீட்கள் சேர்க்கப்பட்டு இனி, 965 சீட்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
கடந்த நவம்பரில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஐ.பி.எஸ்.,சுக்கான தேர்வு சீட்கள் 130 லிருந்து 150 வரை அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன்படி இந்தப் புதிய அறிவிப்பில் 150 இடங்கள் ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இது அந்தமான் நிகோபார் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.கடந்த 1999 லிருந்து 2002 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதுபவர் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து கவலை தெரிவித்திருந்தது. அதை, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கமல் குமார் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி உறுதி செய்து, 2009 அக்டோபர் 15ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதனால் தான் ஐ.பி.எஸ்.,சுக்கு கணிசமான அளவில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குடிமைப் பணிகளுக்கான முதல்கட்டத் தேர்வுகள் வரும் மே மாதம் 23ம் தேதி நடக்கவிருக்கின்றன. அதில், 965 சீட்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
