தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாழ்வில் முன்னேற கடவுள் அருள் தேவை: ஜெயேந்திரர் அறிவுரை

வாழ்வில் முன்னேற கடவுள் அருள் தேவை: ஜெயேந்திரர் அறிவுரை

வாழ்வில் முன்னேற கடவுள் அருள் தேவை: ஜெயேந்திரர் அறிவுரை


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி, நாரதகான சபாவில் நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சி ஜெயேந்திரர் கலந்து கொண்டு பேசியதாவது:

விநாயகர் தன் பெற்றாரை எப்படி மதித்தாரோ, அதுபோல் மாணவர்களும் தங்கள் பெற்றோரை மதிப்பது அவசியம். ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும். கடவுளை வழிபடுவது அவசியம். ஒரே கடவுள் தான், பல பெயர்களில் இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல, கடவுளின் அருள் தேவை.இவ்வாறு ஜெயேந்திரர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆர்.எம்.கே. பள்ளிகளின் முதுநிலை முதல்வர் சதீஷ் பங்கேற்று, மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:மாணவர்கள் பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு வாரியத்தின் கேள்வித் தாள்களை வாங்கி படிக்க வேண்டும்.

பதட்டம் இல்லாமல், தேர்வுகளை எழுத வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதுடன், சரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். எதிர்மறையாக பேசுவோரை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து மாணவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு, நானே உதாரணம். என்னை விமர்சித்தவர்களை சமாளித்து எனது மன தைரியத்தாலும், கடவுளின் அருளாலும் முன்னேறினேன்.இவ்வாறு சதீஷ் பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் பம்மல் விஸ்வநாதன், ராமகிருஷ்ணன், சி.எஸ்.மேத்தா, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us