UPDATED : ஆக 05, 2023 12:00 AM
ADDED : ஆக 05, 2023 05:52 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் மாணவர்களுக்கான 3 நாட்கள் நடக்கும் விளையாட்டுப்போட்டி நேற்று துவங்கியது. டீன் சுகந்திராஜகுமாரி துவக்கி வைத்தார்.மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி,கல்லுாரி துணை முதல்வர் சலீம் பங்கேற்றனர். கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டி நடந்தது. முதலாம் ஆண்டு,2ம் ஆண்டு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் விளையாடினர். இன்றும், நாளையும் நடக்கிறது.
