தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிதாக தனித்தனி இயக்குனரகங்கள்:ஆசிரியர்கள் வலியுறுத்தல்

புதிதாக தனித்தனி இயக்குனரகங்கள்:ஆசிரியர்கள் வலியுறுத்தல்

புதிதாக தனித்தனி இயக்குனரகங்கள்:ஆசிரியர்கள் வலியுறுத்தல்


UPDATED : ஜன 11, 2010 12:00 AM

ADDED : ஜன 11, 2010 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2010 12:00 AM ADDED : ஜன 11, 2010 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் ஆண்டுதோறும் பதவி உயர்வு குறித்த பேனல் பெறப்படுவது வழக்கம். 1996 முதல் 2003 வரை பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் புதிய அணுகுமுறை கையாளப் பட்டுள்ளது. பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் வகையில், 30 ஆண்டுகளாக இல்லாத புதிய நடைமுறை கையாளப்பட்டுள்ளது.

இதன்படி பதவி உயர்வுக்கான ஆசிரியர்களிடம் இருந்து, தலைமை ஆசிரியராகவோ அல்லது மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவோ மட்டுமே உயர்வு பெறும் வகையில் கடிதங்கள் பெறப்படுகிறது.

முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர், மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர் பதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. தற்போதைய புதிய நடவடிக்கை மூலம் இவை முழுவதுமாக மறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த நடவடிக்கையை முழுமையாக அரசு கைவிட வேண்டும்.சமச்சீர் கல்வி முறை சிறந்ததாக இருப்பினும், தற்போதைய 1:40 விகித ஆசிரியர்களால் முழு அளவில் பலனைப்பெற முடியாது. இதனை 1:20 என்ற அளவிற்கு மாற்றி, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பலர் 45 வயதிற்கு மேல், அரசு பணிக்கு வந்துள்ளனர்.

இவர்களில் 6,0000க்கும் மேற்பட்டோர், தனியார் பள்ளிகளில் தலைமை பதவிகளில் பணியாற்றியுள்ளனர். இதனை பணிக்காலமாகக் கருதி, இவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வியில் 6 முதல் 8ம் வகுப்பிற்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். மேலும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென தனித்தனி இயக்குனரகங்கள் ஏற்படுத்த வேண்டும்.&' இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாநில தலைவர் ரவிக்குமார், இணை செயலாளர்கள் கனகராஜ், இரணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us