தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய தலைவர் பொறுப்பேற்பு


UPDATED : ஜன 12, 2010 12:00 AM

ADDED : ஜன 12, 2010 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2010 12:00 AM ADDED : ஜன 12, 2010 12:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, காசி விஸ்வநாதன் இருந்தார். அவர் ஓய்வுபெற்றதை ஒட்டி, புதிய தலைவராக செல்லமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வீட்டுவசதி வாரிய செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். செல்லமுத்து நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக, 2006-07ம் ஆண்டில் 2,300க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், 2007-08ம் ஆண்டில் 4,300க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், 2008-09ம் ஆண்டில் 7,500க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துள்ளது.
 
தற்போது குரூப் 1, குரூப் 1 பி உள்ளிட்ட நான்கு வகையான பணிகளுக்கு தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மேலும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், சமூக நலம் மற்றும் சத்துணவு துறை உதவி இயக்குனர்கள், அறிவியல் உதவியாளர் கிரேடு 2, பொருட்காட்சி காப்பாளர்கள், அரசு கல்லூரிகளுக்கான நூலகர்கள் உள்ளிட்ட 12 வகையான பணிகளுக்கு, 350 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
 

இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்.சில பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலமும், குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்வில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது அக்கால நிலையை அறிந்தும், தேர்வு எழுதுபவர்களின் திறமையை கண்டறியும் விதத்திலும் இருக்க வேண்டும். இதற்காக ஆழ்ந்து ஆராய்ந்து புதிய முறைகள் கையாளப்படும்.பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது, ஒதுக்கீடு வாரியாக பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு காலதாமதம் ஆகிறது.


கம்ப்யூட்டரின் உதவி, கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, பணியாளர்களின் பணி நேரத்தை அதிகரிப்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, கால இடைவெளி படிப்படியாக குறைக்கப்படும்.மேலும் நடத்தப்பட்ட தேர்வுகளில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு, விரைவில் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு செல்லமுத்து கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us