தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வு: ஒத்திகை நேர்காணல்

சிவில் சர்வீஸ் தேர்வு: ஒத்திகை நேர்காணல்

சிவில் சர்வீஸ் தேர்வு: ஒத்திகை நேர்காணல்


UPDATED : ஜன 12, 2010 12:00 AM

ADDED : ஜன 12, 2010 01:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2010 12:00 AM ADDED : ஜன 12, 2010 01:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் இத்துறையில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர் அடங்கிய குழுவினர் நடத்திய இந்த இலவச நேர்காணல், பங்கேற்ற மாணவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை அளித் துள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகிய இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கோவை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வு மையம் சார்பில் இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கனகராஜ் மற்றும் இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் வகுப்புகளை கையாள்கின்றனர்.இங்கு பயிற்சி பெற்ற பலர், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல உயர் பதவிகளை பெற்றுள்ளனர். இதுவரை ஐ.ஏ.எஸ்., முதல் நிலை மற்றும் மெயின் தேர்வுகளுக்கு மட்டுமே மாணவர்களை தயார்படுத்தி வந்த இம்மையத்தினர், கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் உதவியுடன் தமிழகத்தில் முதல் முறையாக மாதிரி நேர்காணல் (மோக் இன்டர்வியூ) நடத்தியுள்ளனர்.

பங்கேற்ற மாணவர்கள் இதனால் வெற்றிக்கான தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் அறையில் நடந்த மாதிரி நேர்காணல், டில்லியில் நடத்தப்படும் நிஜ நேர்காணல் போலவே நடத்தப்பட்டது. பங்கேற்ற மாணவர்களும் நேர்காணலுக்கான ஆடைகள் அணிந்து, அறையின் உள்ளே சென்று அமர்வது முதல் பதிலளிப்பது வரை முறையான நுணுக்கங்களை பின்பற்றினர்.கோவை வணிகத்துறை அமலாக்கப்பிரிவு இணை கமிஷனர் அஜய் யாதவ், கோவை உதவி கலெக்டர்(பயிற்சி) பிரசாந்த், சேலம் உதவி கலெக்டர் லலிதா லஷ்மி, பேராசிரியர் கனகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர். தற்போது ஐ.ஏ.எஸ்., மெயின் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் ஏழு மாணவர்கள் மாதிரி நேர்காணலில் பங்கேற்றனர்.
 
இவர்கள் கோவை, சென்னை, ஈரோடு, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.மாணவர்கள் கூறியதாவது:எங்கள் குடும்பம், சார்ந்துள்ள மாவட்டம், விருப்பப் பாடம் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகள், இந்திய அரசியல், சமுதாய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், காலநிலை மாற்றம், சர்வதேச அரசியல், போன்ற பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

நிஜமான நேர்காணலைப் போலவே நடத்தப்பட்டது. பதட்டம், பயம் ஆகியவற்றை களைந்து, யோசித்து பதில் அளிக்குமாறு அறிவுரை வழங்கினர். ஒவ்வொருவருக்கும் 40 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது.நேர்காணலுக்குப் பின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, நாங்கள் செய்த தவறுகள் பற்றி விளக்கி, அவற்றை திருத்தும் வழிமுறைகளை கற்றுத் தந்தனர்.
 
கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நேர்காணலை வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். அந்த சி.டி.,க்கள் எங்களிடம் வழங்கப்பட்டன. நேர்காணலின் போது அமர்ந்திருந்த விதம், முக பாவனைகள், உடை, பதற்றம், பதிலளித்த விதம் ஆகியவற்றை பார்த்து தவறுகளை திருத்திக் கொள்ளவும், மாதிரி நேர்காணல் திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்தது. இன்னும் நேர்காணலுக்கு மூன்று மாதங்கள் உள்ளது.அதற்குள் குறைகளை நிவர்த்தி செய்ய போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதால், நேர்காணலில் உறுதியாக வெற்றி பெறுவோம். இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பல லட்சம் ரூபாய் கட்டணம் கொடுத்தும் கிடைக்காத பலனை கோவையில் நடந்த இலவச மாதிரி பயிற்சி அளித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், பங்கேற்ற மாணவர்களுக்கு அரசு துறை குறித்த பயிற்சி முதல் நாள் அளிக்கப்பட்டது.

மாநகராட்சி பின்பற்றும் இ-கவர்னன்ஸ், இ-டெண்டரிங் முறைகள் வாயிலாக வரிவசூலிப்பு அதிகரித்திருப்பது, ஒளிவுமறைவற்ற இத்திட்டங்களின் நன்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி அலுவலர்கள் விளக்கினர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us