தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1ல் சேர ஆப்டிடியூட் தேர்வு?

பிளஸ் 1ல் சேர ஆப்டிடியூட் தேர்வு?

பிளஸ் 1ல் சேர ஆப்டிடியூட் தேர்வு?


UPDATED : ஜன 12, 2010 12:00 AM

ADDED : ஜன 12, 2010 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2010 12:00 AM ADDED : ஜன 12, 2010 01:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எனினும் பொதுத் தேர்வு என்பதில் சி.பி.எஸ்.இ., வேறொரு முறையை அறிமுகப்படுத்த இருப்பது தான் தற்போது செய்தி. மாணவர்களின் அடிப்படைத் திறனை அறிய உதவும் ஆப்டிடியூட் தேர்வு முறை ஒன்றை விரைவில் சி.பி.எஸ்.இ., நடைமுறைப்படுத்தவுள்ளது.

இது குறித்த விவாதம் ஒன்று சமீபத்திய சி.பி.எஸ்.இ., கூட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டது. 10ம் வகுப்புத் தேர்வை அந்தந்த மாநிலங்களே பொதுத் தேர்வாகவோ அல்லது வழக்கமான ஆண்டிறுதித் தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ., கூறினாலும் இந்த ஆப்டிடியூட் தேர்வு தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. 10ம் வகுப்பில் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் 11ம் வகுப்பு படிக்க தகுதியானவர்கள் தானா என்பதை அறிய இந்த ஆப்டிடியூட் தேர்வு உதவும். இதற்கான ஒப்புதல் இந்த கூட்டத்தில் தரப்பட்டுள்ளது.
 
அடுத்தடுத்து தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக 10ம் வகுப்புத் தேர்வை விருப்பத் தேர்வாக சி.பி.எஸ்.இ., மாற்றியது உண்மை தான். ஒரே பள்ளியில் 10ம் வகுப்பையும் 11ம் வகுப்பையும் படிக்கும் மாணவர்கள் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதுவதைத் தவிர்க்கலாம்.

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் 10ம் வகுப்புத் தகுதி தான் அடிப்படைத் தகுதியாக உள்ளது. எனவே 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பதன் விளைவுகள் குறித்தும் இந்தக் கூட்டம் விவாதித்தது. மாநிலங்களின் முடிவுக்கு விடும் புதிய முறையால் அவற்றுக்கிடையே சமமில்லாத தன்மையும் குழப்பமும் ஏற்பட்டிருப்பதாக இந்தக் கூட்டத்தில் பரவலான கருத்துக்கள் எழுந்தன.

எனவே ஆப்டிடியூட் தேர்வு என்பது இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் படிப்பவருக்கு மட்டுமல்லாமல், 10ம் வகுப்புக்குப் பின் பிளஸ் 1 படிப்பில் சேரவும் அடிப்படை அம்சமாகும் நாள் தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us