தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு வேலைக்கான பதிவு ஜன., 30ம் தேதி நடத்த ஏற்பாடு

வெளிநாட்டு வேலைக்கான பதிவு ஜன., 30ம் தேதி நடத்த ஏற்பாடு

வெளிநாட்டு வேலைக்கான பதிவு ஜன., 30ம் தேதி நடத்த ஏற்பாடு


UPDATED : ஜன 13, 2010 12:00 AM

ADDED : ஜன 13, 2010 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2010 12:00 AM ADDED : ஜன 13, 2010 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், கடந்த 31 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை தகுந்த ஊதியத்துடன் பணியமர்த்தி வருகிறது.


வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்தால் பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவை தவிர்த்து, அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், மாவட்டங்களுக்கே நேரடியாக வந்து பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக சிறப்பு முகாம்களை நடத்துகிறது. அதன்படி, வரும் 23, 24ம் தேதி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 30, 31 தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.


காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்க உள்ளது. பதிவு முகாமில், தங்களது கல்வி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள், நான்கு ஃபோட்டோக்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும், தொழில் அனுபவம் உள்ளவர்களும் பங்கேற்கலாம்.


பதிவு கட்டணமாக, லேபர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டபடிப்பு முடித்தவர்கள் வரையிலான பணியிடங்களுக்கு 442 ரூபாய், செவிலியர், பாரா மெடிக்கல் டெக்னீசியன், அனைத்து மருத்துவ பணியாளர்கள், இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, முதல்நிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், பட்டதாரிகள், கம்ப்யூட்டர் படிப்பு வரை 772 ரூபாய், டாக்டர்கள் 995 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 94446 - 90026, 93818 - 00181, 99402 - 76356, 044 - 24464268/69 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us