UPDATED : ஜன 13, 2010 12:00 AM
ADDED : ஜன 13, 2010 05:06 PM
அ நிறம் | அளவு
இந்திய கம்யூ., செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு தலைவருமான நாரா கலைநாதன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1936ம் ஆண்டு துவக்கப் பட்ட வரலாற்று சிறப்புமிக்க அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றமாகும். இந்த அமைப்பின் 27வது அகில இந்திய மாநாடு, பிப்ரவரி 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை புதுச்சேரியில் நடக்க உள்ளது.கல்வியை வியாபாரமாக்குவதை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இங்கு அனுமதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், கல்வியில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 799 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் 100 பேர் பெண்கள். இதுமட்டுமல்லாமல், 7 மாநிலங்களில் இருந்து 105 பேர் கொண்ட கலைக் குழுவினரும் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி வருகின்றனர். பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட் டம், ஜெயராம் ஓட்டலில் நடத்தப்பட்டது. இதில் 101 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்புக் குழுவும், 35 பேர் கொண்ட மாநாட்டு செயற் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. வரவேற்புக் குழு சிறப்பு தலைவராக விசுவநாதன் எம்.எல்.ஏ., தலைவராக நாரா கலைநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக சலீம்,
பொருளாளராக எல்லை சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டை நல்ல முறையில் நடத்துவதற்கு வசதியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சலீம், எல்லை சிவக்குமார் உடனிருந்தனர்.
