மிலன்-2010 கலைநிகழ்ச்சி: 7,000 மாணவர்கள் பங்கேற்பு
மிலன்-2010 கலைநிகழ்ச்சி: 7,000 மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : ஜன 15, 2010 12:00 AM
ADDED : ஜன 15, 2010 12:33 PM
அ நிறம் | அளவு
இதுகுறித்து மாணவர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலா ஸ்ரீதர் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள தேசியளவிலான கலைநிகழ்ச்சிகள், இம்மாத இறுதியில் நடைபெற உள்ளன. இதன் பிரபலத்தன்மை காரணமாக, நாடு முழுவதிலும் அமைந்துள்ள இன்ஜினியரிங், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மிலன் - 2010 என்ற கலைநிகழ்ச்சியின் முதல் கட்டத்தில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும், இந்நிகழ்ச்சியின் பிரபலத்தன்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு கலா ஸ்ரீதர் கூறினார்.
