தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமையாசிரியர்களுக்கான நிர்வாக பயிற்சியில் தகவல்

தலைமையாசிரியர்களுக்கான நிர்வாக பயிற்சியில் தகவல்

தலைமையாசிரியர்களுக்கான நிர்வாக பயிற்சியில் தகவல்


UPDATED : ஜன 15, 2010 12:00 AM

ADDED : ஜன 15, 2010 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2010 12:00 AM ADDED : ஜன 15, 2010 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்களாக இருந்து அப்படியே தலைமையாசிரியர் பணிக்கு வந்துவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கற்றல், கற்பித்தலில் நன்கு திறமை இருக்கிறது.


அதே சமயம் நிர்வாகத்தில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை விரும்பியது.இதற்காக கல்வி மாவட்ட அளவில் இரண்டு தலைமையாசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நிர்வாகம் சம்பந்தமாக முழு விபரம் அடங்கிய பயிற்சி அளிக்கப்பட்டது.


பயிற்சி பெற்ற முதன்மை கருத்தாளர்கள் மூலம் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் அடங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியிலும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள் துவங்கியது. தூத்துக்குடியில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி தலைமை வகித்தார்.

முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் குமாரதாஸ், அன்னம்மாள் கல்வியல் கல்லூரி முதல்வர் பிபிராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம், ஜெரால்டு, ராமானுஜம்புதூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆசைத்தம்பி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற 112 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து முதன்மை கருத்தாளரும், ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான ராபர்ட்சன் சுதந்திரராஜ் பேசியதாவது;


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கட்டாயம் நிர்வாகம் சம்பந்தமான பயிற்சி தேவை. நிர்வாக பயிற்சி இருந்தால் தான் திறமையான நிர்வாகத்தை பள்ளியில் நடத்த முடியும். இதனால் தான் பள்ளிக் கல்வித்துறை இந்த பயிற்சியை தலைமையாசிரியர்களுக்கு அளிக்கிறது.தலைமையாசிரியர்கள் நிர்வாகத்தினை ஆராய்ந்து அறிய வேண்டும்.


உள்ளார்ந்த மதிப்பீடு செய்ய வேண்டும். திறமைக்கு சவால் கொடுக்க வேண்டியவற்றை அணுக வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு அது சம்பந்தமாக வரும் எதிர்மறை கருத்துக்களுக்கு விளக்கம் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.எந்த ஒரு பிரச்னையையும் அணுகும் போது பிரச்னையின் பலம், பலவீனத்தை ஆராய வேண்டும். ஆராய்ந்த பிறகு ஆராய்ச்சியின் அடிப்படையில் எடுக்கும் முடிவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us