தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம்: விபரம் சேகரிக்கும் பணி

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம்: விபரம் சேகரிக்கும் பணி

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம்: விபரம் சேகரிக்கும் பணி


UPDATED : ஜன 16, 2011 12:00 AM

ADDED : ஜன 16, 2010 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2011 12:00 AM ADDED : ஜன 16, 2010 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டமைப்பு வசதிகளை பொருத்து, பள்ளிகள் தரம் (கிரேடு) பிரிக்கப்பட உள்ளன.சுயநிதி, நர்சரி, மெட்ரிக்., பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, நீதிபதி கோவிந்தராஜன் குழுவை, அரசு நியமித்துள்ளது. இவரது தலைமையில், சமீபத்தில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கட்டணம் குறித்து அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது.

விபரம் சேகரிப்பு:இதன்படி, பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கட்டடங்களின் நிலை, ஆசிரியர் திறன், கல்வித்தரம் உட்பட 41 விபரங்களைசேகரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கெடு:தனியார், மெட்ரிக்., நர்சரி பள்ளி நிர்வாகிகள், இவ்விபரங்களை வரும் 22 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட விபரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். இதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில், கட்டணத்தை அரசு நிர்ணயிக்கும்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை பொருத்து ஏ, பி, சி என மெட்ரிக்., நர்சரி, சுயநிதி பள்ளிகள் தரம் பிரிக்கப்படும். தரம் வாரியாக கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us