UPDATED : ஜன 16, 2010 12:00 AM
ADDED : ஜன 16, 2010 10:20 AM
அந்தந்த சட்டசபை தொகுதிகளில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி
மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 30 வயது நிரம்பிய 8வது முதல்
பட்டமேற்படிப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கல்வித்
தகுதிக்கேற்ப தனியார் துறையில் வேலைவாய்ப்பு (ஆசிரியர் பணி தவிர்த்து)
பெறுவதற்கான நேர்முகத்தேர்வு முகாம் பிப்ரவரி 19, 20, 21ம் தேதிகளில்
ஜோசப் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாம் எம்.பி. கனிமொழி தலைமையில்
நடைபெற உள்ளது.
தமிழகத்திலுள்ள முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று
தங்களுக்கு தேவையான பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய
உள்ளனர்.முகாமில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சட்டசபை தொகுதிகள் வாரியாக கீழ்காணும் இடங்களில் நடைபெறும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான பதிவு முகாமில் தங்களது வயது சான்றிதழ் நகலுடன் வந்து முன்பதிவு செய்து பயனடையலாம். வேலைகோருபவர்கள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
பொறியியல், தொழில்நுட்பம்.குரூப் பி: ஐ.டி.ஐ, டி.எம்.இ, டி.பார்ம்,
கேட்டரிங்.குரூப் சி: 8, 9, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேறிய
மற்றும் தவறியவர்கள், உதவியாளர், ஓட்டுனர் மற்றும் லர்கள்.வேலைவாய்ப்பு
முகாமில் கலந்து கொள்ள சட்டசபை தொகுதி வாரியாக பதிவு செய்யும் இடங்கள்: லால்குடி- எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி 1, திருச்சி 2, ஸ்ரீரங்கம் - கலைஞர் அறிவாலயம், மணப்பாறை - புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி. தொட்டியம் - ஜி.வி.என்.மெட்ரிக் பள்ளி. முசிறி - அமலா மெட்ரிக் பள்ளி. திருவெறும்பூர் - முக்குலத்தோர் பள்ளி. துறையூர் - ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி. மண்ணச்சநல்லூர் - சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றிடலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
