தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற இளைஞர்களுக்குவேலை வாய்ப்பு பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்குவேலை வாய்ப்பு பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்குவேலை வாய்ப்பு பயிற்சி


UPDATED : ஜன 17, 2010 12:00 AM

ADDED : ஜன 17, 2010 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2010 12:00 AM ADDED : ஜன 17, 2010 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்காக, ஒரு இளைஞருக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது.

இத்திட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 1.1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள், தங்களது வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுத்தாலும், இத்திட்டத்திற்கு உதவ சம்மதம் தெரிவித்துள்ளன.மத்திய அரசுடன் இணைந்து, கிராமப்புற இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க, முன்னணி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

இரண்டில் இருந்து மூன்று மாதங்கள் வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். பின்னர், பயிற்சி பெற்ற இளைஞர்களில் குறைந்தது 75 சதவீதம் பேரை, சம்பந்தபட்ட நிறுவனங்கள் பணியமர்த்திக் கொள்ளும். இத்திட்டத்திற்காக, ஒரு இளைஞருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.டிரைவிங், சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு, வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் தொடர்பான பயிற்சிகள், இளைஞர்களுக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us