இந்தியாவை பலப்படுத்த கல்வியில் மாற்றம் தேவை : கிரண் பேடி
இந்தியாவை பலப்படுத்த கல்வியில் மாற்றம் தேவை : கிரண் பேடி
UPDATED : ஜன 17, 2010 12:00 AM
ADDED : ஜன 17, 2010 06:26 PM
அ நிறம் | அளவு
செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி கூறியதாவது : நாட்டின் கல்வி திட்டம் மிகவும் மோசமாக உள்ளது; குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள் பற்றி யாரும் கவனம் செலுத்துவதில்லை; நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி ஏற்படுத்தி தருவதே, பலமான இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாகும்; இதற்கு சமூக நல அமைப்புக்களின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் போலீஸ் துறையின் நிலை குறித்து கேட்டதற்கு, அனைத்து மாநிலங்களிலும் போலீசாரின் நிலை தற்போது மோசமாகவே உள்ளது எனவும், அவர்களுக்கு வேண்டிய குடியிருப்பு வசதிகளும் மோசமாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
