எம்.பி.பி.எஸ்., மாணவிகள்: பாராட்டு விழா நடத்திய கிராம மக்கள்
எம்.பி.பி.எஸ்., மாணவிகள்: பாராட்டு விழா நடத்திய கிராம மக்கள்
UPDATED : ஜன 19, 2010 12:00 AM
ADDED : ஜன 19, 2010 02:11 PM
இருவருக்கும் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. ரம்யா, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியிலும், பிரியா சேலம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்கின்றனர். களரம்பட்டி கிராமத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் முதல் மாணவியருக்கு, கிராம மக்கள் ஒன்று கூடி பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர்.
பெரமனூர் ராமநாதஸ்வாமிகள் நினைவு திடலில் நடந்த பாராட்டு விழாவுக்கு முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் மணி வரவேற்றார். ஆசிரியர்கள் ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன், சுப்ரமணி, செல்வராசு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கோவிந்தராஜன், ஆடிட்டர் ஆறுமுகம், பெரமனூர் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் தங்கவேல், நெடுமாறன் ஆகியோர் பேசினர். மாணவிகளுக்கு செந்தமிழ் கலை மன்றம் சார்பில் வெற்றிக்கோப்பை வழங்கினர். மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
