ஆதி திராவிட மாணவர்களுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை
ஆதி திராவிட மாணவர்களுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை
UPDATED : ஜன 20, 2010 12:00 AM
ADDED : ஜன 20, 2010 11:46 AM
கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக 7 கோடியே 71 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுவரை, 19 ஆயிரத்து 659 மாணவ, மாணவியருக்கு 6 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 342 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு, தகுதியுள்ள மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எம்.,கல்லூரி, நரசீபுரம் தொழில் நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை கல்லூரி, முதுநிலை கல்லூரி, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரி, ஜோதிபுரம் பயனியர் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 36 லட்சத்து 4070 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் உமாநாத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, கலர் டிவி வழங்கல் துணைக் கலெக்டர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
