தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிகர்நிலை பல்கலை மாணவர்களின் படிப்பு பாதிக்காது: துணைவேந்தர் உறுதி

நிகர்நிலை பல்கலை மாணவர்களின் படிப்பு பாதிக்காது: துணைவேந்தர் உறுதி

நிகர்நிலை பல்கலை மாணவர்களின் படிப்பு பாதிக்காது: துணைவேந்தர் உறுதி


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தகவலை சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில் அங்கீகாரம் ரத்தாகும் நிகர்நிலைப் பல்கலைகளில், ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், அரசுப் பல்கலைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றன. மாணவர்களின் கல்வி பாதிக்காதபடி, அருகில் உள்ள பல்கலைகளுடன் சேர்க்கப்படும். சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலையுடன் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலை, அறிவியல் மாணவர்கள், அருகில் உள்ள பல்கலைகளில் படிக்கவும் வழிவகை செய்யப்படும். ஆனால், நிகர்நிலைப் பல்கலைகளின் பாடத்திட்டமும், அரசுப் பல்கலைகளின் பாடத்திட்டமும் வெவ்வேறாக இருக்கின்றன.


 
இரண்டையும் ஒப்பிட்டு, பொதுவான பாடத் திட்டம் வழங்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலை மாணவர்களின் கல்வியை பொறுத்தவரை, அதை ஒரு சிறப்பு திட்டமாக எடுத்து செயல்படுத்த வேண்டும். மத்திய அரசும் அதைத்தான் செய்ய விரும்புகிறது. இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசின் முடிவு குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: கல்வித்தரம் இல்லாமல், குடும்ப நிறுவனங்களாக கல்விக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, கடை சரக்காக்கப்பட்ட கல்வி வியாபாரத்தின், ஒட்டுமொத்த சீரழிவை வெளிப்படுத்தியுள்ளது. மோசடி பல்கலைகளின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி தொடர்ந்திட, உரிய ஏற்பாடுகளைச் செய்வதோடு, அவர்களுக்குரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இவ்வாறு வரதராஜன் தெரிவித்துள்ளார்.




பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: நிகர்நிலைப் பல்கலைகளின் செயல்பாடுகள், முறைகேடுகளைப் பற்றி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்து, மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசே அங்கீகாரம் வழங்குவதும், பின் அவற்றின் தரம் போதாது எனக் கூறுவதும், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மேம்போக் கான வகையில் செயல்படுவது தெரிகிறது. மத்திய அரசு, நிகர்நிலைப் பல்கலைகள் பற்றிய தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்து, கல்வித் தரத்தை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வெளியிட்ட அறிக்கையில்,மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அரசியல் பின்னணி மற்றும் லஞ்ச வழிகளில் அங்கீகாரத்தை பெற்றிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத பல்கலைக்கு அங்கீகாரம் பெற்றதற்கு காரணமானவர்கள் மீது, குற்றவியல் வழக்கு தொடர்ந்து, உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us