ரெயூனியன் இந்தியா வம்சா வழி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை
ரெயூனியன் இந்தியா வம்சா வழி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை
UPDATED : ஜன 23, 2010 12:00 AM
ADDED : ஜன 23, 2010 01:05 PM
அ நிறம் | அளவு
இத்தகவலை புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசினார்.
இந்திய வம்சாவழி தமிழர்களின் நினைவாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தின் திறப்பு விழா நடந்தது.
விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த ரெயூனியன் தீவில் குடியேறிய நம்முடைய தொழிலாளர்கள் வளர்ச்சிப்பெற்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு அவர்களின் கடின உழைப்பே காரணம். நம்முடைய தாய் மண் மீது அவர்கள் மிகுந்த பாசம் வைத்துள்ளனர். விமானத்தில் இருந்து இறங்கிய உடன் தாய் மண்ணை வணங்கிவிட்டுதான் வந்துள்ளனர்.
தாய் மண்ணை ஒரு பிடி மண்ணாவது கொடுத்தால் அதை பெருமையாக எடுத்துச் செல்வோம் என்கின்றனர். இது பெருமையாக உள்ளது. தாய் மண்ணின் மீது அவர்களுக்குள்ள அன்பு, பாசம், மூதாதையர்கள் மீது உள்ள மரியாதை ஆகியவை துளியளவும் குறையவில்லை. தமிழகத்தின் கலாசாரத்தை தென்னிந்திய கலைகளை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருகின்றனர்.
நம்முடைய மூதாதையர் நல்ல சந்ததியினரை கொடுத்துள்ளனர். நமது பண்பாட்டை காக்கும் அவர்களுக்கு நல்ல திட்டத்தை தரவேண்டும். அங்குள்ள குழந்தைகள், தென்னிந்திய கலையான இசையை பயில விரும்பினால் பாரதியார் பல்கலைக்கூடத்தில் அவர் களுக்கு சிறப்பான இடத்தை தந்து முழு செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும்.
அவர்கள் இங்கு வந்து எந்தக் கலையை பயின்றாலும் அதற்கான முழு தொகையையும் புதுச்சேரி அரசு முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும். அவர்கள் நினைத்தால் மேலை நாடுகளில் கூட தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். ஆனால் இந்திய மக்களின் கலாசாரம் பண்பாட்டில் தங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று நினைக்கின்றனர். நமது பல்கலைக்கழகத்திற்கு எத்தனை பேரை அவர்கள் படிக்க அனுப்பினாலும், அதற்கான கல்வித்தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு முதல்வர் வைத்திலிங்கம் பேசினார்.
