ஒரே வகுப்பில் படாதபாடு : விழி பிதுங்கும் மாணவர்கள்
ஒரே வகுப்பில் படாதபாடு : விழி பிதுங்கும் மாணவர்கள்
UPDATED : ஜன 23, 2010 12:00 AM
ADDED : ஜன 23, 2010 05:55 PM
அ நிறம் | அளவு
பந்தலூர் குந்தலாடி அரசு துவக்கப் பள்ளியில், தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி போதிக்கப்படுகிறது; 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் நிலையில், வகுப்பறை கட்டடங்கள் பராமரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 வகுப்பறை கட்டடங்களும் சீரமைக்கப்படுவதால், மீதமுள்ள ஒரு வகுப்பில் தான் மாணவர்கள் "அடைத்து&' கல்வி கற்க வேண்டியுள்ளது; இதனுள்ளும், ஒப்பந்ததாரர்கள் செங்கற்களை அடுக்கி வைத்துள்ளதால், சிரமம் ஏற்பட்டுள்ளது.
வகுப்பில் அமர முடியாத மாணவர்கள், வராண்டாவில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரின் செயல் குறித்து, மாணவர்களின் பெற்றோர், கூடலூர் ஆர்.டி.ஓ., மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
