தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்டர்நெட் மூலம் வெளிநாட்டினருக்கு யோகா பயிற்சி

இன்டர்நெட் மூலம் வெளிநாட்டினருக்கு யோகா பயிற்சி

இன்டர்நெட் மூலம் வெளிநாட்டினருக்கு யோகா பயிற்சி


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடலையும், மனதையும் மேம்படுத்தக்கூடிய யோகா பயிற்சிகளின் மகத்துவம், உலகம் முழுவதும் அறியப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யோகா மையங்கள் அதிகரித்துள்ளன. இன்னும் பல நாடுகளில், யோகாவை முறையாக கற்றுத் தர ஆசிரியர்கள் இல்லாமல் யோகா ஆர்வலர்கள் தவிக்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அமீத் அகர்வால், இன்டர்நெட் மூலம் யோகாவை கற்பிக்கும் நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வரும் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் யோகா பத்திரிகையாளர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், இன்டர்நெட் மூலம் யோகாவை கற்பிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட உள்ளன.

இது குறித்து அமீத் அகர்வால் குறிப்பிடுகையில், யோகா கற்பிக்கும் ஆசிரியரிடம் நேரிடையாக சந்தேகங்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த பயிற்சி இருக்கும். வெப் கேமரா மூலம் யோகாசன ஆசிரியர் கற்பிக்க பணம் செலுத்தி படிக்கும் மாணவர், தன்னிடம் உள்ள கம்ப்யூட்டர் திரையில் யோகாசனத்தை பார்த்து பயிற்சி பெறலாம்.

மாணவர் செய்யும் பயிற்சியை, அந்த மாணவன் வைத்துள்ள வெப் கேமரா மூலம் ஆசிரியர் பார்த்து, தவறுகளை சரி செய்வார். குறிப்பாக, இந்த இன்டர்நெட் மூலமான யோகா பயிற்சியை வெளிநாட்டினருக்காக அறிமுகப்படுத்தியுள்ளோம்&' என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us