தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உரிய வேலை வாய்ப்பு கோரி வளர்கல்வி பணியாளர்கள் மனு

உரிய வேலை வாய்ப்பு கோரி வளர்கல்வி பணியாளர்கள் மனு

உரிய வேலை வாய்ப்பு கோரி வளர்கல்வி பணியாளர்கள் மனு


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி வளர்கல்வி பணியாளர் சங்கம் சார்பில் சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ., தங்கத்திடம் அளித்த மனு:

வளர்கல்வி திட்டம் முடக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் வளர்கல்வி பணியாளர்கள் பணியிழந்து பொருளாதார நிலையில் சிரமப்படுகின்றனர். மாவட்டந்தோறும் வளர்கல்வி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், நிதி ஒதுக்கவும் அரசிடம் சட்டசபை மனுக்கள் குழு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு சார்பில் தற்போது தேசிய பெண்கள் எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்கீழ், தமிழகத்தில் ஈரோடு, சேலம், தர்மபுரி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் திட்ட அனுமதி வழங்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்த 25 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாநிலம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் அறிவொளி, வளர்கல்வி திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, கல்வித்தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். ஊராட்சிகளில் செயல்படும் அண்ணா மறுமலர்ச்சி அனைத்து கிராம திட்ட நூலகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக, வளர்கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் நூலகராக வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us