UPDATED : ஜன 24, 2010 12:00 AM
ADDED : ஜன 24, 2010 08:49 PM
டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய மூன்று பெரியதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மூன்றாவது காலாண்டில் 17 ஆயிரம் பணியாளர்களை பணிக்குச் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர்கள் சேர்ப்பது மிகவும் குறைந்தது. மேலும், பலர் பணியிழக்கும் அபாயமும் ஏற்பட்டது. தற்போது பொருளாதார நிலை சீரடையத்த வங்கியதை அடுத்து, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் மீண்டும், புதிதாக அதிக அளவில் பணியாளர்களை நியமிக்கத் துவங்கி உள்ளன.
டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ ஆகிய மூன்று பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் முந்தைய இரண்டு காலாண்டுகளை விட மூன்றாவது காலாண்டில் 17 பணியாளர்களை வேலைக்கு சேர்ந்துள்ளன.
இதுகுறித்து கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான பாலாஜி என்பவர் கூறுகையில், கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வாய்ப்புக் கிடைத்தால் பெரிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு செல்லவும் தயாராக உள்ளனர் என்றார்.
