தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழக மாணவர்கள் சாலை மறியல்

எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழக மாணவர்கள் சாலை மறியல்

எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழக மாணவர்கள் சாலை மறியல்


UPDATED : ஜன 25, 2010 12:00 AM

ADDED : ஜன 25, 2010 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2010 12:00 AM ADDED : ஜன 25, 2010 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போலீசார் அவர்களை விரட்டிக் கலைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நாடு முழுவதும் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், விதிமுறை மீறி இயங்கியதாகக் கூறி கடந்த 18ம் தேதியன்று அவற்றின் அங்கீகாரங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலைக் கழகம் உட்பட 17 நிகர்நிலை பல்கலைக் கழகங் களும் அடக்கம். மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலையில் ஆயிரக்கணக் கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 19ம் தேதி வகுப்பிற்கு வந்த மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதைதொடர்ந்து, அன்று முதல் வரும் 27ம் தேதி வரை கல்லூரிக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக் கழக நுழைவாயில் முன், நேற்று காலை 11 மணியளவில் திடீரென கூடினர். பின், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இருபுறம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராஜ், இன்ஸ் பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர்.மாணவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு ஏற்படவில்லை. அப்போது சாலை ஓரத்தில் இருந்து இடைவெளியில் மாநகர பஸ்சை டிரைவர் இயக்க முயன்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் கள் சிலர், அந்த பஸ் மீது கல்வீசினர். இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் விரட்டி அடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us