தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைந்த கட்டண பயிற்சிகளுக்கும் ஆர்வமில்லாத இளைஞர்கள்

குறைந்த கட்டண பயிற்சிகளுக்கும் ஆர்வமில்லாத இளைஞர்கள்

குறைந்த கட்டண பயிற்சிகளுக்கும் ஆர்வமில்லாத இளைஞர்கள்


UPDATED : ஜன 25, 2010 12:00 AM

ADDED : ஜன 25, 2010 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2010 12:00 AM ADDED : ஜன 25, 2010 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராமப்புற மக்களும் குறைந்த கட்டணத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இங்கு தையல், மோட்டார் ரீவைண்டிங், நவீன ஆடை அலங்காரம், ரேடியோ, டிவி பழுதுநீக்குதல் என 40க்கும் மேற் பட்ட தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எழுதப் படிக்க தெரிந்தோர் முதல், படிப்பை இடையில் நிறுத்தியோர் என பலரும் பயிற்சி பெறலாம். தினமும் இரண்டரை மணி நேரம் பயிற்சி நடக்கும். 2 மாதம் முதல் 6 மாதம், ஒரு ஆண்டு வரையிலான குறுகிய கால பயிற்சிகளான இவற்றுக்கு பயிற்சி கட்டணம் மாதம் நூறு ரூபாய் முதல் 250 வரை உள்ளது.

இச்சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். இவ்வளவு குறைந்த கட்டணத்தில் வேலை வாய்ப்பு அளித்தும் பல பயிற்சிகளில் சேர ஏனோ இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டி.டி.பி., ஆபரேட்டர், அடிப்படை கம்ப்யூட்டர், எம்.எஸ்., ஆபீஸ், டேலி (கம்ப்யூட்டரைஸ்டு அக்கவுண்டிங்), சர்டிபிகேட் இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆண்களுக் கான தையல் பயிற்சி, அழகுகலை, மொபைல் போன் பழுதுநீக்கல், மெஷின் எம்ப்ராய்டரி, எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், ஜிக்ஜாக் மெஷின் எம்ப்ராய்டரி, செயற்கை பூ தயாரிப்பு, ஹேண்ட் பேக் தயாரிப்பு, உணவு பொருள் பதப்படுத்துதல், மென்பொம்மை தயாரிப்பு போன்ற பல தொழிற் பயிற்சிகளில் மாணவர்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.

சுயதொழில்களாக செய்யவோ, தனியார் நிறுவனங்களுக்கோ இவற்றிற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறைந்த கட்டணம் வசூலிப்பதால் அதன் மதிப்பு தெரியாததாலோ என்னவோ மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
இப்பயிற்சிகளை பெற, 1, கமலாநகர் முதல் தெரு, தல்லாகுளம், மதுரை-2 மற்றும் டி317, ஹவுசிங்போர்டு காலனி, எல்லீஸ்நகர், பிள்ளையார் கோயில் பின்புறம், மதுரை-16 என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். 0452- 2530 879, 260 5240 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us