உலகத்தமிழ் இணைய மாநாடு : கம்ப்யூட்டர் தமிழ் வரைபட போட்டி
உலகத்தமிழ் இணைய மாநாடு : கம்ப்யூட்டர் தமிழ் வரைபட போட்டி
UPDATED : ஜன 26, 2010 12:00 AM
ADDED : ஜன 26, 2010 09:46 AM
அரசு, தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் திருக்குறள், பழமொழி, ஆத்திச்சூடி ஆகிய மூன்று தலைப்புகளில், ஒன்றை தேர்வு செய்து, அப்பாடலை படக்காட்சியாக, பெயின்ட் பிரஷ் கொண்டு வரையவேண்டும்.
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு, பாரதியாரின் செந்தமிழ் நாடெனும், பாரத தேசமென்று பெயர், ஒளிபடைத்த கண்ணினாய், ஓடி விளையாடு பாப்பா, போற்றி ஓராயிரம் போற்றி, கருணாநிதியின் சங்கத்தமிழ், தகடூரான் தந்த கனி, வாளெங்கே அவர் நாக்கெங்கே, பழிதீர்த்து பகை முடித்தாள், முரசுகட்டிலில் மோசிக்கீரனார், சென்றுவா மகனே செருமுனை நோக்கி, பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, சங்கநாதம், எந்நாளோ, புரட்சிகள், வீரத்தாய் ஆகிய மூன்று கட்டுரை தலைப்பு பாடல்களில் ஒன்றை தேர்வு செய்து, அவற்றை படங்கள் மற்றும் அனிமேஷனாக வரையவேண்டும்.
இப்போட்டிகள், அந்தந்த மாவட்டங்களில் பிப்., 12ம் தேதி, ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் நடக்கும். உயர்நிலைப் பள்ளிகளுக்கு 45 நிமிடமும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1 மணி நேரமும் போட்டி நடக்கும். போட்டியில் பங்கேற்பவர், ஒரு தலைப்பிற்கு மட்டுமே படம் வரைய வேண்டும். குழு போட்டியாக இருந்தால், இரண்டு தலைப்புகளை தேர்வு செய்யலாம்.
இப்போட்டி தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன., 31ம் தேதி மாலை 6 மணிக்குள், www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இது குறித்த விவரங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
