UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 05:02 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவத்துறை சார்பில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.டீன் ரத்தினவேல் தலைமை வகித்தார். டாக்டர்கள் சென்னியப்பன், லட்சுமி நரசிம்மன், அமுதன், தினகரன் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த டாக்டர்கள் பேசினர். மறைந்த நரம்பியல் டாக்டர் நாகராஜனின் நினைவாக நரம்பியல் துறை மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாகராஜனின் குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நடராஜன் தலைமையில் டாக்டர்கள் குழு செய்திருந்தது.
