தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.சி.எஸ்., நிறுவனத்தில் அதிகரிக்கும் வேலைகள்

டி.சி.எஸ்., நிறுவனத்தில் அதிகரிக்கும் வேலைகள்

டி.சி.எஸ்., நிறுவனத்தில் அதிகரிக்கும் வேலைகள்


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 03:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 03:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் 8 ஆயிரத்து 500 புதிய பயிற்சியாளர்களையும் லேடரல் முறையில் 3 ஆயிரம் பேரையும் பணிக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது. தொடர்ந்து புதிய வேலைகளைப் பெற்றிருப்பதாலும் இதன் வளர்ச்சி வேகமாக முன்னேறுவதாலும் புதியவர்கள் தேவைப்படுகின்றனர்.

கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 703 பயிற்சியாளர்களையும் 3 ஆயிரம் லேடரல் முறைப் பணியாளர்களையும் ஏற்கனவே இந்த நிறுவனம் பணி நியமனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3வது காலாண்டில் மொத்தம் 12 ஆயிரத்து 854 பணியாளர்களை நியமித்தன் மூலமாக நிகரப் பணி நியமனம் 7 ஆயிரத்து692 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கேற்ப திறனாளர்களை பயன்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறையின் தேவைக்கான வளர்ச்சியை இதன் மூலமாக எட்ட முடியும் என்றும் டி.சி.எஸ்., நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த நிறுவனத்தின் அமெரிக்க வளர்ச்சி மையத்திலும் புதிதாகப் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐ.டி., துறையில் 10.8 சதவீதமும் பி.பி.ஓ., துறையில் 18.3 சதவீதமும் வேலைக் குறைப்பு உள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் வேலைக் குறைப்பு விகிதம் 11.5 சதவீதமாக மட்டுமே உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us