எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்றவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை
எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்றவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை
UPDATED : ஜன 29, 2010 12:00 AM
ADDED : ஜன 29, 2010 02:07 PM
அ நிறம் | அளவு
சம்மட்டிபுரத்தை சேர்ந்த சரவணஅய்யப்பன் தாக்கல் செய்த ரிட் மனு:
சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றேன். உடற்கூறு தேர்வில் கலந்து கொண்டேன். "என் கண்களை பரிசோதித்ததில் எந்த பிரச்னையும் இல்லை என, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் அங்கு கண்ணுக்கு சிகிச்சையும் எடுத்து கொண்டேன்.
எனக்கு நிறக்குருடு இருப்பதாக கூறி, தேர்வில் கலந்து கொள்ள தகுதியில்லை என, தேர்வாணைய தலைவர் தெரிவித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை மீண்டும் மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும், ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆஜராயினர்.
நீதிபதி வி.தனபாலன், மனுதாரர் மீண்டும் மருத்துவ சோதனைக்கு அனுப்ப கோரி தேர்வாணைய தலைவருக்கு மனு செய்ய வேண்டும். அதை அவர் ஒரு வாரத்திற்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வை குறைபாடு இல்லாத பட்சத்தில் மனுதாரரை எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்ய பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
