தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 12,500 பள்ளிகளில் நுகர்வோர் சங்கங்கள்

தமிழகத்தில் 12,500 பள்ளிகளில் நுகர்வோர் சங்கங்கள்

தமிழகத்தில் 12,500 பள்ளிகளில் நுகர்வோர் சங்கங்கள்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கலசலிங்கம் பல்கலையில் இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு, உரிமை குறித்து நடந்த கருத்தரங்கிற்கு துணைவேந்தர் செல்லையா தங்கராஜ் தலைமை வகித்தார்.

தமிழக அரசின் நுகர்பொருள் , நுகர்வோர் பாதுகாப்புதுறை இணை ஆணையாளர் மகேஷ்வரன் பேசியதாவது: உலக மயமாக்கல் எனும் வார்த்தை 1985ம் ஆண்டு தியோடோவெர் லெவிட் என்பவரால் உபயோகப்படுத்தப்பட்டது. உலக சந்தையில் நுகர்வோர் பாதுகாப்பு உலக மயமாக்கலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசின் சட்டம் , நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற பல சட்டங்கள் நம் மீது அதிக அளவிலான உரிமைகளை உறுதி செய்கிறது.


ஆனால் மக்களுக்கு இச்சட்டங்களை பற்றி முழுமையாக தெரியாத நிலை உள்ளது. மத்திய மாநில அரசின் சார்பில் செயல்படும் அமைப்புகள் மாணவர்களிடையே நுகர்வோர், சேவை ஆகியவை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் படி தமிழகத்தில் 12 ஆயிரத்து 500 பள்ளிகளில் நுகர்வோர் சங்கங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்தியரசும் ஊராட்சி அளவில் உறுப்பினர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை பெறுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் இந்திய நுகர்வோர் சங்க தலைவர் சந்தோஷ் மிஸ்ரா, செயலாளர் ஜெயராம், பல்கலை மேலாண்மை துறை தலைவர் காமேஸ்வரராவ், பேராசிரியர் ஜெயகுமார் பேசினர். சக்திவேல் ராணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us