ஊனமுற்றோர்களுக்கு சிறப்பு பள்ளி, பஸ் வசதி: நெப்போலியன் தகவல்
ஊனமுற்றோர்களுக்கு சிறப்பு பள்ளி, பஸ் வசதி: நெப்போலியன் தகவல்
UPDATED : ஜன 31, 2010 12:00 AM
ADDED : ஜன 31, 2010 08:43 AM
அவர் பேசியதாவது:
இந்தியாவில் 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 2 கோடியே 19 லட்சம் பேர் உடல் ஊனமுற்றோர்கள். இதில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் விழியிழந்தோர். கை, கால், உடல் ஊனமுற்றோர் 61 லட்சம் பேர். மனவளர்ச்சியற்றோர் 22 லட்சம். வாய்பேசாதோர் 16 லட்சம், காதுகேளாதோர் 12 லட்சம். ஆனால், வாய் பேச இயலாத, காதுகேளாத, விழியிழந்தோர் என 3 புலன்களும் குறைபாடுடையவர்களை பற்றிய கணக்கெடுப்பு இல்லை. 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பில், இந்த வகையினரை தனியாக கணக்கெடுக்க, ஆலோசனை செய்யப்படும்.
விழியிழந்தோர் ஒரு கோடியே 6 லட்சம் பேர் இருந்தாலும், 30 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக பெறப்பட்டுள்ளன.புலன்கள் நன்றாக இருந்தும், எதையுமே பயன்படுத்தாமல் இருப்பது கூட ஒரு வகையில் ஊனம் தான். ஆனால் வாய் பேசாத, காது கேளாத, விழியிழந்தவர்கள், சாதாரண மனிதர்களைப் போல வாழ்ந்து காட்டுகின்றனர்.
இந்தியாவில் முதன்முறையாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், சிறப்பு பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடக்க இயலாத குழந்தைகள் வீல் சேரில் அமர்ந்தபடி, பாடம் படிக்கலாம். கழிப்பறைக்கு செல்லலாம். மற்றவர்களின் துணையின்றி, சுதந்திரமாக வலம் வர வேண்டும் என்பதற்காக, இப்பள்ளியை உருவாக்கியுள்ளோம். ஆனால் பள்ளி வருவதற்கு முன்பாக, பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதற்காக சிறப்பு பஸ், வடிவமைக்கப் பட்டு வருகிறது. மாணவர்கள் வீட்டிலிருந்து வீல் சேரில் வந்து, பஸ்சில் அப்படியே ஏறலாம். வீல் சேரை கழற்ற வேண்டியதில்லை. பஸ்சிலிருந்து இறங்கலாம். 30 பேர் செல்லும் வகையில் உள்ள இந்த பஸ், ஒரு மாதத்தில் தயாராகி விடும். அரசு வெப்சைட்டுகளில், சமூக நீதித்துறைக்கான இணையதளத்தை, விழியிழந்தோர் மற்றும் செவித்திறன் குறைந்தோர் பயன்பெறும் வகையில், பிரெய்லி முறையில் வடிவமைத்துள்ளோம்.
தேசிய அளவில், கடந்த நிதியாண்டில், இத்துறைக்கு 2585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்க கோரியுள்ளோம்.கிராமங்களில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோராக இருந்தால், அந்த கிராமத்தின் மேம்பாட்டுக்கு 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் 1000 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எத்தனை கிராமங்கள் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
