தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூகுளில் புதிய டிரான்ஸ்லிட்ரேஷன் ஐ.எம்.இ., சாப்ட்வேர் அறிமுகம்

கூகுளில் புதிய டிரான்ஸ்லிட்ரேஷன் ஐ.எம்.இ., சாப்ட்வேர் அறிமுகம்

கூகுளில் புதிய டிரான்ஸ்லிட்ரேஷன் ஐ.எம்.இ., சாப்ட்வேர் அறிமுகம்


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதாவது நமக்கு எந்த மொழியில் வேண்டுமோ அதனை ஆங்கிலத்தில் டப் செய்தால், அது நமக்கு தேவையான மொழியில் தட்டச்சு செய்யும். தமிழில் டைப் செய்ய விரும்புபவர்கள், இந்த சாப்ட்வேரை ‌டவுன்லோடு செய்து கொள்ளலாம். சத்தத்தை அடிப்படையாக கொண்டு தட்டச்சு செய்தால், அதற்கு ஏற்ற வார்த்தை தமிழில் வரும்.

உதாரணமாக, ஆங்கிலத்தில் அணூதடூ என்று டைப் செய்தால் அது அப்படியே தமிழில் அருள் என்று டிரான்ஸ்லிட்ரேஷன் செய்து காட்டும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி இனி நமக்கு தேவையான மொழிகளில் டைப் செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக இந்த சாப்ட்வேர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

தமிழ் உட்பட 14 மொழிகளில் இந்த வசதி உள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் அடங்கும். இந்த சாப்ட்வேர் பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்ததுள்ளது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பயன்படுத்த இண்டர்நெட் இணைப்பு அவசியமில்லை.

இந்த சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய:
http://www.google.com/transliterate/indic/ ‌
என்ற யு.ஆர்.எல்.,லை பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us