தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி: இந்திய மாணவர் சங்க மாநாடு தீர்மானம்

சமச்சீர் கல்வி: இந்திய மாணவர் சங்க மாநாடு தீர்மானம்

சமச்சீர் கல்வி: இந்திய மாணவர் சங்க மாநாடு தீர்மானம்


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர் சங்கத்தின் 5வது நெல்லை மாநகர மாநாடு வண்ணார்பேட்டையில் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் மகேஸ்வரி கொடியேற்றினார். மாநகர தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். அரசு சட்டக் கல்லூரி கண்ணன், தூய யோவான் கல்லூரி ராஜ் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை சீனிராஜ் வாசித்தார். மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார் மாநாட்டு துவக்கவுரை ஆற்றினார். கடந்த தடங்களும், புதிய தடங்களும் என்ற தலைப்பில் மாநகர செயலாளர் பேச்சிமுத்து பேசினார்.

மாநாட்டில் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் பிரபு, மாநிலக் குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தூய யோவான் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் கணபதி வாழ்த்துரை வழங்கினர். அரசு சட்டக் கல்லூரி செயலாளர் நிஜாம், ராணி அண்ணா கல்லூரி மாணவர் பேரவை தலைவர் பிரேமா, சேவியர் கல்லூரி விஜி, ம.தி.தா.இந்துக்கல்லூரி சுரேஷ்ராஜன், காமராஜர் பள்ளி முத்துக்குமார், மந்திரமூர்த்தி பள்ளி முருகேசன் தீர்மானங்களை வாசித்தனர்.

தீர்மானங்கள்: சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்தவேண்டும். பாளை.,யில் பி.சி.மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், முதுகலை மாணவியர் விடுதிகளை திறக்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் செனட், சிண்டிகேட்டில் மாணவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். நெல்லை மாநகர தனியார் பஸ்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கவேண்டும். விடுதி மாணவர்களுக்கு தரமான உணவை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் அருண்பிரவீன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் தசரசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us