UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 11:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக் கிளை சார்பில் துாத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ரூ.3 லட்சம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க முன்னாள் பொதுச்செயலாளர் பர்வராஜன், ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், தலைவர் மணிமேகலை, செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் எமிமால் ஞானச்செல்வி, துாத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வராஜ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டி, ஜாக்டோ ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சந்திரன் பங்கேற்றனர்.