UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 09:23 AM

சிவகங்கை :
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஜப்பான் ஆர்க்வோர் தொல்நுட்ப நிறுவனமும் இணைந்து காளையர்கோவில் சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மியோவாக்கி முறையில் பசுமை உலகம் அமைக்க குறுங்காடுகள் அமைக்கும் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சேகர் தலைமை வகித்தார். ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சேவற்கொடியோன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளைத் தலைவர் வீரபாண்டி வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி குறுங்காடுகளை அமைப்பதன் அவசியம் குறித்து பேசினார். ஜப்பான் ஆர்க்வேர் தொழில்நுட்ப நிறுவன நிறுவனர் பிரபு மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கினார். முன்னாள் கிளைப் பொருளாளர் பிரிட்டோ நன்றி கூறினார்.