UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 08:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஜூலை 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வரும் ஆக., 25ம் தேதி வெளியாக உள்ளது.
இதனை தேர்வுத்துறை இணையதளமான www.dge.tn.gov.in மூலம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அந்த மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை தங்கள் பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்களின் மதிப்பெண்களை இணையதளம் மூலம் சரிபார்த்து, தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும்படி தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.