UPDATED : மார் 23, 2026 11:05 AM
ADDED : மார் 23, 2026 11:07 AM
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை ரத்தினம் செவிலியர் கல்லூரியில் மாநில கருத்தரங்கம் நடந்தது.
டாக்டர் சிந்து ரேகா தலைமை வகித்தார். நியூட்ரிசியன் விஜயலட்சுமி 'தாய்மையை வளர்த்தல்' என்ற தலைப்பிலும், டாக்டர் பாரதி 'பெண்களின் முழுமையான ஆரோக்கியம்' என்ற தலைப்பிலும், மதுரை விக்ரம் செவிலியர் கல்லூரி டாக்டர் சபயேட்டா பானு 'வழக்கமான பிறப்பிற்கு அப்பாற்பட்டது' என்ற தலைப்பிலும், மதுரை வேலம்மாள் செவிலியர் கல்லூரி பேராசிரியர் செலின் ஜெயசீலி 'முன் களத்தில் மருத்துவர்கள்' என்ற தலைப்பில் பேசினர்.
காரைக்குடி அழகப்பா செவிலியர் கல்லூரி துணை முதல்வர் கயல்விழி, விருதுநகர் வி.வி.வி., பெண்கள் கல்லூரி பேராசிரியர் சித்ரா, மதுரை சி.எஸ்.ஐ., பேராசிரியர் சாந்தி, ரத்தினம் கல்லூரி பேராசிரியர் சித்ரா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
ஏற்பாடுகளை ரத்தினம் கல்வி குழுமம் ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வி, அமைப்பு செயலாளர் ஆனந்தபாக்கியம் செய்தனர்.

