UPDATED : ஏப் 23, 2026 06:18 PM
ADDED : ஏப் 23, 2026 06:19 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவுகள், சுயநிதி பிரிவுகளில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
ஏழு தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்வில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 90 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கல்லூரிச் செயலாளர் குமரேஷ் பணி ஆணை வழங்கினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி ஒருங்கிணைத்தனர்.
