UPDATED : மே 18, 2026 03:24 PM
ADDED : மே 18, 2026 03:26 PM
அ நிறம் | அளவு
கோவை:
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேர, 'கேட்-பி' என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதே போல், பயோடெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர்கள் பி.இ.டி., என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்தத்தேர்வுகளை ஆண்டுதோறும், தேசிய தேர்வு முகமை கணினி வழியில் நடத்துகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று கேட்-பி மற்றும் பி.இ.டி., தேர்வுகள், ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி மற்றும் உப்பிலிபாளையம், யு.டி.சி., தனியார் நிறுவனம் ஆகிய இரண்டு மையங்களில் நடந்தது. இரண்டு ஷிப்டுகளாக நடந்த தேர்வை, 583 மாணவர்கள் எழுதினர்.
