தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டப்படிப்பு கலந்தாய்வு

சட்டப்படிப்பு கலந்தாய்வு

சட்டப்படிப்பு கலந்தாய்வு


UPDATED : நவ 11, 2026 01:37 PM

ADDED : நவ 11, 2026 01:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 01:37 PM ADDED : நவ 11, 2026 01:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் சென்டாக் மூலம் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான பி.ஏ., எல்.எல்.பி., மற்றும் பி.பி.ஏ., எல்.எல்.பி., திருத்தப்பட்ட காலியிட கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி காமராஜர் மணிமண்டப வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் இன்று நேரடி கலந்தாய்வு நடக்கிறது. ஜி.எல்.சி., மற்றும் எஸ்.எம்.வி.இ.சி., சட்டக் கல்லுாரிகளில் உள்ள மொத்தம் 16 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கலந்தாய்வு காலை 10:30 மணி முதல் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள் 30 நிமிடங்களுக்கு முன் கலந்தாய்வு மையத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தின் நகல், மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட வசிப்பிட மற்றும் சமூகச் சான்றிதழ்கள் மற்றும் இதர சிறப்பு இடஒதுக்கீட்டுச் சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us