UPDATED : டிச 28, 2010 12:00 AM
ADDED : டிச 28, 2010 02:13 PM
நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அனைத்து விதமான பண பரிவர்த்தனை சாதனங்களை சேகரிப்பது, அவற்றை பற்றி படிக்கும் படிப்பிற்கு நாணய ஆய்வியல். இதனை ஆங்கிலத்தில் "நுமிஸ்மாடிக்ஸ்&' என்று அழைக்கிறார்கள். இந்த துறை வல்லுனர்களை "நுமிஸ்மாடிஸ்ட்&' என்று அழைக்கப்படுகிறார்கள்.
வரலாற்றை தெரிந்துகொள்ள ஆய்வாளர்கள் இதுபோன்ற நாணய சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தங்கம், செப்பு, தோல், தாமிரம் போன்ற பல விதமான உலோகங்களில் நாணயங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. நாணயங்களை ஆராய்ச்சி செய்ததன் மூலமாக பல வரலாற்று நிகழ்வுகள், வர்த்தக பரிமாற்றங்கள் தெரிய வந்துள்ளதன் காரணமாகவே இந்த துறை சார்ந்த ஆராய்ச்சிகள் தொடர்கிறது.
கல்வித் தகுதி
இந்த துறையில் வரலாற்று பாடத்தில் ஆர்வமுள்ளவர்கள் நுழையலாம். இந்த துறையில், இந்தியாவை பொறுத்தளவில் பிராமி, தேவனாகிரி போன்ற மொழிகளை தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் பழங்கால இந்திய நாணயங்களில் பெரும்பாலும் இந்த மொழி எழுத்துக்களே இடம்பெற்றுள்ளன.
வேலைவாய்ப்பு
இந்த துறை வல்லுனர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு தொல்லியல் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறை என்பதால் உலகளவில் இவர்களின் தேவை இருக்கத்தான் செய்கிறது.
படிப்புகள்
எம்.ஏ., நுமிஸ்மாட்டிக்ஸ், எம்.ஏ., பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் போன்ற படிப்புகளை படிக்கலாம். இதுதவிர எம்.ஏ., வரலாறு படித்தவர்களும் இந்த துறையில் சாதிக்கலாம். இதில் பி.எச்டி., செய்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
கல்வி நிறுவனங்கள்
மும்பை பல்கலைக்கழகம், மும்பை
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரனாசி
கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா
டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம், மத்தியபிரதேசம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் நுமிஸ்மாடிக்ஸ், நாசிக்
