UPDATED : டிச 31, 2010 12:00 AM
ADDED : டிச 31, 2010 10:14 AM
சென்னை-ஐ.ஐ.டி., 2011, மே மாதம் 8 ஆம் தேதி நடக்கும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த நுழைவுத்தேர்வானது, மேம்பாட்டு படிப்புகள் மற்றும் ஆங்கில படிப்புகளுக்கான, ஒருங்கிணைந்த 5 வருட எம்.ஏ. பட்டத்திற்கானதாகும். இப்படிப்பின் சிறப்பு என்னவெனில், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் படிப்புகளின் விரிவான தன்மை விளக்கப்பட்டு, அவற்றில் தங்களுக்கு விருப்பமானதை மாணவர்கள் தேர்ந்தெடுக்க உரிமை வழங்குதலாகும். இப்படிப்பின் முதல் 2 வருடங்களில், மேற்கண்ட 2 பெரும் பாடப்பிரிவுகள் சம்பந்தமான பொதுப் பாடங்களின் வகைகள் பற்றிய அறிமுகம் தரப்படும். அந்த 2 பெரும் பாடப்பிரிவுகள் 3 ஆம் வருடத்திலிருந்து கற்றுத்தரப்படும்.
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவிலாவது படித்து, கூட்டாக 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 2011 -இல் தகுதித்தேர்வு எழுதவிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1986, அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தேர்வானது இரண்டு பகுதிகளைக் கொண்டு, 3 மணிநேரம் கால அவகாசம் கொண்டதாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 19 கடைசி தேதி. விண்ணப்பக் கட்டணம் ரூ.800. ஆனால் எஸ்.சி/எஸ்.டி. மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ரூ.400.
இதைப்பற்றி மேலும் விரிவாக தகவல் அறிய www.hsee.iitm.ac.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
