UPDATED : ஏப் 01, 2016 12:00 AM
ADDED : ஏப் 01, 2016 11:33 AM
சென்னை
: இந்த
ஆண்டுக்கான புத்தக கண்காட்சி, தீவுத்திடலில், ஜூன் 1ம் தேதி முதல், 13ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன், செயலர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் ஆகியோர் கூறியதாவது:சென்னை, தீவுத்திடலில் ஜூன் 1ம் தேதி, 39வது புத்தக கண்காட்சி துவங்க உள்ளது. 13ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், 900 அரங்கங்கள் அமைய உள்ளன.
இந்த முறை தீவுத்திடலில் கண்காட்சி நடக்க இருப்பதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் இருக்காது. 4,000 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்திக் கொள்ளலாம். இந்த முறை, கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா ஆகியவையும் நடக்க உள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்க, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
