தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.வி.,பள்ளியில் 1ம் வகுப்பிலேயே தமிழ் கற்பிக்க வேண்டும்

கே.வி.,பள்ளியில் 1ம் வகுப்பிலேயே தமிழ் கற்பிக்க வேண்டும்

கே.வி.,பள்ளியில் 1ம் வகுப்பிலேயே தமிழ் கற்பிக்க வேண்டும்


UPDATED : நவ 14, 2020 12:00 AM

ADDED : நவ 14, 2020 09:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2020 12:00 AM ADDED : நவ 14, 2020 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்தே, தமிழ் மொழி பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும்&' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தாய்மொழியாம் தமிழை கற்பிக்க, பல்வேறு கடும் நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்திருப்பதற்கு கடும் கண்டனம். தமிழ் மொழி மீதுள்ள வெறுப்புணர்வை, மத்திய அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிஷப்புகள் சந்திப்பு

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில், கிறிஸ்துவ திருச்சபைகளின் பிஷப்புகள் சந்திரசேகரன், சர்மா நித்தியானந்தா, பக்தசிங் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த, தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்தனர்.பள்ளிகள் திறப்பு விவகாரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு போராடிய மாணவர்களுக்கு குரல் கொடுத்து வெற்றி கண்டதற்காக, ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us