தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏப்., 1ல் கூடுகிறது சென்னை பல்கலை சிண்டிகேட்

ஏப்., 1ல் கூடுகிறது சென்னை பல்கலை சிண்டிகேட்

ஏப்., 1ல் கூடுகிறது சென்னை பல்கலை சிண்டிகேட்


UPDATED : மார் 29, 2026 10:13 PM

ADDED : மார் 29, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2026 10:13 PM ADDED : மார் 29, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், வரும் ஏப்., 1ல் தேதி கூடுகிறது.

சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில், வரும் ஏப்., 1ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.

கல்வி கட்டணம் உயர்வு, பல்கலையின் கீழ் இயங்கும் தனியார் கல்லுாரி முதல்வர் நியமன அனுமதி, பல்கலை வளாகம் மற்றும் செனட் அரங்கில் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் வாகன நிறுத்த கட்டணம் உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தவிர, தொலைத்துார கல்வியில் கிறிஸ்துவம் குறித்த இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்; சமூக களப்பணி மாணவர்களுக்கு 100 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட, 36 வகையான கருப்பொருட்கள் குறித்து பேசப்பட உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, கொள்கை சார்ந்த முடிவுகள், பல்கலை சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதிக்க கூடாது என, பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலையின் கல்வி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் நிகழ்வு என்பதால், சிண்டிகேட் கூட்டம் நடத்தலாம் என, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us