பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகள் 2026: கால அட்டவணை வெளியீடு!
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகள் 2026: கால அட்டவணை வெளியீடு!
UPDATED : மே 08, 2026 08:35 PM
ADDED : மே 08, 2026 08:39 PM

சென்னை:
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம், 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 நிலுவை பாடங்கள் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணை
பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
ஜூன் 29:
பகுதி - 1 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
ஜூன் 30:
பகுதி - 2 ஆங்கிலப் பாடம்.
ஜூலை 01:
கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல் மற்றும் செவிலியர் (பொது).
ஜூலை 02:
தொடர்பியல் ஆங்கிலம், அறநெறி மற்றும் இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி - வேதியியல், அட்வான்ஸ்டுத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் (தொழிற்கல்வி) மற்றும் அடிப்படை மின் பொறியியல்.
ஜூலை 03:
வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல்.
ஜூலை 06:
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்.
ஜூலை 07:
இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்.
பிளஸ் 1 நிலுவை பாடங்களுக்கான தேர்வு
பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
ஜூலை 08:
பகுதி - 1 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
ஜூலை 09:
பகுதி - 2 ஆங்கிலப் பாடம்.
ஜூலை 10:
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்.
ஜூலை 13:
இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்.
ஜூலை 14:
தொடர்பியல் ஆங்கிலம், அறநெறி மற்றும் இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி - வேதியியல், அட்வான்ஸ்டுத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் (தொழிற்கல்வி) மற்றும் அடிப்படை மின் பொறியியல்.
ஜூலை 15:
வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல்.
ஜூலை 16:
கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல் மற்றும் செவிலியர் (பொது).
இதனைத் தொடர்ந்து, அனைத்துத் தேர்வுகளும் காலை 10:00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 01:15 மணி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, முதல் 10 நிமிடம் மாணவர்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த ஐந்து நிமிடம் தேர்வர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன் பிறகு காலை 10:15 மணி முதல் 01:15 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.