தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 98.1% தேர்ச்சியுடன் கோவை முதலிடம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 98.1% தேர்ச்சியுடன் கோவை முதலிடம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 98.1% தேர்ச்சியுடன் கோவை முதலிடம்


UPDATED : ஜூலை 31, 2020 12:00 AM

ADDED : ஜூலை 31, 2020 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2020 12:00 AM ADDED : ஜூலை 31, 2020 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் முழுவதும் 8.30 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களின், மொபைல் போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. 
இன்று வெளியான முடிவுகளில் மாணவர்கள் 94.38 சதவீதமும், மாணவிகள் 97.49 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 96.04 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் அதிகமாகும்.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

கோவை - 98.10 சதவீதம்விருதுநகர் - 97.90 சதவீதம்கரூர் - 97.51 சதவீதம்

பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்:

அறிவியல் பாடப் பிரிவுகள் - 96.33 சதவீதம்வணிகவியல் பாடப் பிரிவுகள் - 96.28 சதவீதம்கலைப் பிரிவுகள் - 94.11 சதவீதம்தொழிற்பாடப் பிரிவுகள் - 92.77 சதவீதம்

முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்:


இயற்பியல் - 96.68 சதவீதம்வேதியியல் - 99.95 சதவீதம்கணக்குப் பதிவியல் - 98.16 சதவீதம்உயிரியல் - 97.64 சதவீதம்கணிதம் - 98.56 சதவீதம்தாவரவியல் - 93.78 சதவீதம்விலங்கியல் - 94.53 சதவீதம்கணினி அறிவியல் - 99.25 சதவீதம்வணிகவியல் - 96.44 சதவீதம்
பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள் - 92.71 சதவீதம்அரசு உதவிபெறும் பள்ளிகள் - 96.95 சதவீதம்தனியார் பள்ளிகள் - 99.51 சதவீதம்பெண்கள் பள்ளிகள் - 97.56 சதவீதம்ஆண்கள் பள்ளிகள் - 91.77 சதவீதம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us