தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்!

மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்!

மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்!


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முக்கிய பாட தேர்வுகளுக்கு, மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு வசதியாக, இரண்டு நாள் முதல் மூன்று நாள் வரை இடைவெளி அளித்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பொதுத்தேர்வுக்கான ஆரம்பக் கட்ட பணிகள், தேர்வுத்துறையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த பட்டியல், மாவட்ட வாரியாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வை, மூன்று லட்சத்து நான்காயிரத்து 900 மாணவர்கள், மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 மாணவியர் என, ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர்கள் எழுதினர்.

இந்த எண்ணிக்கை, ஏழு லட்சமாக அதிகரித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியல் பெறப்பட்ட நிலையில், தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியும் நடந்து முடிந்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதியன்று துவங்குகிறது. 20ம் தேதிவரை தேர்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாட தேர்வுகளுக்கு, கடைசி நேரத்தில் நல்ல முறையில் மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக, அட்டவணையில் போதிய இடைவெளி தரப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முக்கியப் பாட தேர்வுகள் அனைத்தும், இரண்டு நாள், மூன்று நாள் இடைவெளிக்குப் பின் நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வுக்கான ஆரம்பகட்டப் பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான பணிகளும் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி.,-மெட்ரிக்.,-ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த முழுமையான விவர பட்டியலை, வரும் 27ம் தேதிக்குள் தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாணவர்கள் பட்டியல் வந்து கொண்டிருக்கின்றன.

இம்மாத இறுதிக்குள் பட்டியல் வந்ததும், அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெறும். கடந்த பொதுத்தேர்வில், எஸ்.எஸ்.எல்.சி.,யில் மட்டும் எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த எண்ணிக்கை, ஒன்பது லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தேர்வெழுதும் மாணவர் பட்டியல் வந்ததும் சரியான புள்ளி விவரம் தெரியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us